Tuesday, June 13, 2017

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுதள்ளிப்போக வாய்ப்பு.

‘நீட்’ நுழைவுத்தேர்வு விவகாரம் காரணமாக, எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைப் பணியில் காலதாமதம் ஏற்பட்டிருப்பதால் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு திட்ட மிட்டபடி ஜூன் 27-ம் தேதி தொடங் குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 844 பேர் விண்ணப் பம் சமர்ப்பித்துள்ளனர். பொறி யியல் படிப்புக்கு விண்ணப்பித் தவர்களுக்கு ஜூன் 20-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டு 22-ம் தேதி தர வரிசைப்பட்டியல் வெளியிடப்படும் என்றும், முதல்கட்ட கலந்தாய்வு 27-ம் தேதி தொடங்கும் என்றும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.எம்பிபிஎஸ் படிப்புக்கான கலந் தாய்வு முடிந்த பின்னர் பொறியி யல் கலந்தாய்வு நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், நீட் நுழைவுத்தேர்வு விவகாரம் காரணமாக மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஆகிவருகிறது.

நீட் நுழைவுத்தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சிபிஎஸ்இ-க்கு இடைக்கால தடை விதித்த நிலையில், இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தேர்வு முடிவுகளை வெளியிட உச்சநீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.எனினும், நீட் நுழைவுத்தேர்வு விவகாரம் காரணமாக மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை பணிகள் காலதாமதமாகி வருவதால், பொறியியல் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டபடி ஜூன் 27-ம் தேதி தொடங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் பேராசிரியை இந்துமதியிடம் கேட்டபோது, “பொறியியல்படிப்புக்கு இறுதி நிலவரப்படி ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 844 விண்ணப்பங்கள் வந்துள்ளன. ஏற்கெனவே அறிவித்தபடி, ஜூன் 20-ம் தேதி ரேண்டம் எண் ஒதுக்கப்படும். தரவரிசைப்பட்டியல் 22-ம் தேதி வெளியிடப்படும். கலந்தாய்வு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்” என்றார்.

No comments:

Post a Comment

Auto Scroll Stop Scroll